பசுக்களால் மலேசிய நெடுஞ்சாலையில் நெரிசல்
மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலையில் ஓடிய பசுக்களைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளது.
வாகனங்கள் நிறைந்த டாமான்சாரா -பூச்சோங் ( Damansara-Puchong) நெடுஞ்சாலையில் 2 பசுக்கள் ஓடுவதைக் காணொளியில் பார்க்கமுடிகிறது.
வாகனமோட்டிகள் குழப்பமடைந்தனர். வாகன நெரிசலும் ஏற்பட்டது.
வாகனங்களைத் தவிர்க்க அவை தடம் மாறி ஓடின.
அப்போது நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒரு பசு மீது மோதியது.
பசு அதன் ஓட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்து ஓடியதாக The Star செய்தி நிறுவனம் சொன்னது.
கார் சேதமடைந்ததாக அது கூறியது.
பசுக்கள் ஏன் நெடுஞ்சாலையில் இருந்தன...அவை எங்கிருந்து வந்தன என்பது தெளிவாகத் தெரியவில்லை.