Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Credit Suisse வங்கியுடன் அதன் போட்டி வங்கியான UBS இணையக்கூடும்

வாசிப்புநேரம் -
சுவிட்ஸர்லந்தின் Credit Suisse வங்கியை அதன் போட்டி வங்கியான UBS நிர்வகிப்பதற்கான பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனாலும் Credit Suisse வங்கியை நிர்வகிப்பதால் தான் இழப்பை எதிர்நோக்கக்கூடும் என்று UBS வங்கி அஞ்சுகிறது.

இரண்டுமே சுவிட்ஸர்லந்தின் ஆகப்பெரிய வங்கிகள்.

Credit Suisse வங்கியை எடுத்து நடத்த வேண்டுமானால் சுவிட்ஸர்லந்து அரசாங்கம் ஆறு பில்லியன் டாலர் மதிப்பிலான உத்தரவாதம் தர வேண்டும் என்று UBS வங்கி கேட்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

Credit Suisse எதிர்நோக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள், எதிர்கால இழப்புகள் ஆகியவற்றை கருத்திற்கொண்டு UBS வங்கி கவலை தெரிவித்தது.

நாளை பங்குச்சந்தை திறப்பதற்குமுன் இரண்டு வங்கிகளும் இணைந்துவிடும் என்று இணைப்புக்கான ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

2007ஆம் ஆண்டு பொருளியல் நெருக்கடிக்குப் பிறகு உலகெங்கும் வலுமிக்க இரண்டு பெரிய வங்கிகள் இணையப் போவது இதுவே முதல்முறை.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்