Skip to main content
ரொனால்டோ தடை?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ரொனால்டோ தடை?

வாசிப்புநேரம் -
ரொனால்டோ தடை?

படம்: REUTERS/Pedro Nunes

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

போர்ச்சுகல் தேசிய அணியின் பயிற்சியின்போது பாதியில் வெளியேறிய கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 27ஆம் தேதி நார்வேக்கு எதிரான ஆட்டத்தில் மாற்று ஆட்டக்காரராக களமிறங்க ரொனால்டோ பயிற்சி செய்தார்.

ஆனால் ஆட்டத்தில் அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை.

இம்மாதம் முதல்தேதி, டென்மார்க்கிற்கு எதிரான ஆட்டத்திலும் தொடக்க வீரராக இடம்பெறமாட்டார் என்பதை அறிந்த அவர், போர்ச்சுகல் அணியிலிருந்து வெளியேறினார்.

தேசிய அணிப் பயிற்றுவிப்பாளர் ஜார்ஜ் ஜீசஸ் (Jorge Jesus) தனக்கு விளையாட வாய்ப்பளிப்பதாகக் கூறியதை நிறைவேற்றவில்லை என்று ரொனால்டோ குறைகூறினார்.

அவருக்கு வயது 41. தொடர்ந்து ஆட முடியும் பங்களிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

அணியைவிட்டு வெளியேறியதற்காக, அவர் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

எந்தத் தண்டனையையும் ஏற்றுக்கொள்வதாக ரொனால்டோ கூறினார்.

தாம் அனைத்துலகக் காற்பந்திலிருந்து ஓய்வுபெறவில்லை என்றும் தண்டனைக் காலம் முடிந்ததும் மீண்டும் தேசிய அணிக்காக விளையாடத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தேசிய அணியின் பயிற்சி, ஆட்டம் அல்லது நடவடிக்கையில் பங்கேற்கத் தவறும் வீரருக்கு ஒரு மாதம் முதல் ஆறு மாதம் வரை விளையாடுவதற்குத் தடை விதிக்கப்படலாம்.

இப்போதைக்கு அவர் மீது தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்