காற்பந்து விளையாட்டாளர் கிரிஸ்டியானோ ரொனால்டோ Manchester United அணியை விட்டு வெளியேறுகிறார்..
AFP
பிரபல காற்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) இருதரப்புச் சம்மதத்துடன் மென்செஸ்டர் யுனைட்டட் (Manchester United) அணியிலிருந்து விலகுவதாக அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ரொனால்டோவின் 2 ஆண்டு ஒப்பந்தம் முடிவுறாததால், எஞ்சியிருக்கும் 16 மில்லியன் பவுண்ட் (pound) மதிப்பிலான ஊதியத்தை அவர் விட்டுச்செல்கிறார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அவர் வேறோர் அணியில் சேரக்கூடும்.
கடந்த வாரம், தொலைக்காட்சி நேர்காணலில் மென்செஸ்டர் யுனைட்டட் தமக்குத் துரோகம் செய்ததாக அவர் கூறியிருந்தார்.
37 வயதான ரொனால்டோ ஆண்கள் அனைத்துலகக் காற்பந்துப் போட்டி வரலாற்றில் ஆக அதிகமான கோல்கள் போட்ட பெருமைக்குரியவர்.
மென்செஸ்டர் யுனைட்டட் அணியின் உரிமையாளர்களான கிலேசர் குடும்பத்தினர் (Glazer family) அணியை விற்கத் திட்டமிடுவதாகத் தெரியவந்துள்ளது.
அவர்கள் அணியை வாங்கி 17 வருடங்கள் ஆகிவிட்டன.
மென்செஸ்டர் யுனைட்டட் அணி Premier League போட்டிகளில் கோப்பையைக் கடந்த 9 வருடங்களாக வெல்லவில்லை.