டிஷ்யூவால் தலை துவட்டிய சிறுமி - வீட்டில் வெடித்த பிரளயம்
வாசிப்புநேரம் -
மகள் டிஷ்யூவை (tissue) வைத்துத் தலை துவட்டியதால் தந்தை வீட்டை இரண்டாக்கியிருக்கிறார்.
சம்பவம் சீனாவில் நடந்தது.
அதைக் காட்டும் காணொளியைச் சிறுமியின் தாய் இணையத்தில் வெளியிட்டார்.
இணையவாசிகள் அதை 110 மில்லியன் முறை பார்த்தனர்.
என்ன நடந்தது?
தந்தை அவரது மகளின் முடியில் பொடுகைப் போன்ற சிறு துகள்களைக் கண்டார்.
மகள் டிஷ்யூவை வைத்து முடியைக் காய வைத்திருப்பார் என்று அவருக்குச் சந்தேகம் வந்தது.
அவர் அதைப் பற்றிக் கேட்டபோது மகள் துண்டைப் பயன்படுத்தியதாகச் சொன்னார்.
தந்தை அதை நம்பாமல் தலைமுடியை உலர்த்த உதவும் கருவியை (hairdryer) நொறுக்கினார்.
அப்போது மகள் அறைக்குள் சென்று ஒளிந்துகொண்டாள்.
அவர் ஆவேசமாகக் கதவைத் திறக்க முயன்றார்.
பல முறை கதவை உதைத்தார்; பிளாஸ்டிக் நாற்காலியைக் கதவு மீது எறிந்தார்.
அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை.
சிறுமியின் தாய் காணொளியை இணையத்திலிருந்து நீக்கிவிட்டார்.
இணையவாசிகள் பலரும் தந்தையின் செயலைக் கண்டித்தனர்.
அவர் சிறிய சிக்கலைப் பெரிதுபடுத்தியதாகச் சிலர் கூறினர்.
பலரும் சிறுமியின் நிலையை எண்ணி அனுதாபப்பட்டனர்.

ஆதாரம் : South China Morning Post