Skip to main content
"130 வயதுக்கு மேல் வாழ்வேன்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"130 வயதுக்கு மேல் வாழ்வேன்" - நம்பிக்கையுடன் சொன்ன 90 வயது தலாய் லாமா

வாசிப்புநேரம் -
தலாய் லாமாவுக்கு இன்று 90ஆவது பிறந்தநாள்.

அமைதிக்கான நொபெல் பரிசு பெற்ற அவர் 1959ல் சீன ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டம் தோல்வியுற்றதைத் தொடர்ந்து இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார்.

அவரோடு நூறாயிரக்கணக்கான ஆதரவாளர்களும் இந்தியாவுக்குச் சென்றனர்.

தலாய் லாமா இமயமலை அடிவாரத்தில் இருக்கும் தர்மசாலா என்ற சிற்றூரில் வசிக்கிறார்.

ஒரு வாரமாக நடைபெறும் அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் முத்தாய்ப்பாக இன்று தர்மசாலாவில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்திய அமைச்சர், அமெரிக்கத் திரைப்பட நடிகர் ரிச்சர்ட் கியெர் (Richard Gere) உள்ளிட்ட பலர் அதில் கலந்துகொள்கின்றனர்.

"130 வயதைத் தாண்டி வாழ்வேன்," என்று தலாய் லாமா நம்பிக்கையுடன் சொன்னார். மரணமடைந்தபிறகு மறுபிறவி எடுக்கும் நம்பிக்கையும் இருப்பதாக அவர் கூறினார்.

அவருக்குப் பிறகு யார் புதிய தலாய் லாமா என்பதை அவர் நிறுவிய Gaden Phodrang அறக்கட்டளையே முடிவு செய்யும் என்று அவர் கூறியிருக்கிறார். 
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்