Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தாயார் மறைந்த துக்கத்தில் இரண்டு மணி நேரத்துக்குள் காலமான அன்பு மகள்

வாசிப்புநேரம் -

மலேசியாவில் தாயாரை இழந்த துக்கத்தில் சிக்கிய சோனா காஸ்மி (Saonah Kasmi) இறப்புச் செய்தி கிடைத்த இரண்டு மணி நேரத்துக்குள் காலமானார். 

சம்பவம் நேற்று முன்தினம் (1 டிசம்பர்) நடந்தது. 

சோனாவுக்கு வயது 58. 

அவரது தாயாருக்கு வயது 84. 

இறப்புச் செய்தியை அறிந்த சோனா அதே நாள் ஜொகூரில் நடந்த தாயாரின் இறுதிச்சடங்கிற்குச் சென்றதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன. 

தாயாரைக் கடைசியாக ஒருமுறை பார்க்கச் சென்ற சோனா திடீரெனப் பேச்சு மூச்சுமின்றிக் காணப்பட்டார்.

அவரது குடும்பம் உதவ முயன்றது. ஆனால் எந்த முயற்சியும் கைகொடுக்கவில்லை. 

குடும்பத்தினர் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டனர். 

சோனாவில் மரணம் உறுதிசெய்யப்பட்டது. 

தாயாருக்கும் மகளுக்கும் ஒரே நாள் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. 

தாயாரைப் பார்க்கச் சென்றதற்கு முன்னரே சோனாவுக்கு உடல்நலம் குன்றியிருந்ததாக அவரது சகோதரி சொன்னார். 

ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்