மலேசியாவில் வெள்ளம் - அமைச்சர்களின் விடுமுறை ரத்து
வாசிப்புநேரம் -
மலேசியாவின் பல மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
மொத்தம் 9 மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
நூறாயிரம் பேருக்கு மேல் வீடுகளைவிட்டு வெளியேற நேர்ந்திருக்கிறது.
தென்கிழக்காசியாவில் பல பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
மலேசியாவில் இன்றும் கனத்த மழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டதால் சுமார் 120,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
மக்களுக்கு உதவ 685 தற்காலிக நிவாரண நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கிளந்தான் (Kelantan) மாநிலம் ஆக மோசமாய் பாதிக்கப்பட்டுள்ளதாய் அதிகாரிகள் கூறினர். வெள்ளத்தில் மூவர் மாண்டதாக தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர்கள் விடுமுறையில் போவதைத் தடைசெய்துள்ளதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் (Anwar Ibrahim) கூறினார்.
அமைச்சர்கள் அனைவரும் வெள்ளத்தால் சிரமப்படுவோருக்கு நேரில் சென்று உதவி வழங்கும்படி உத்தரவிடப்பட்டது.
82,000க்கும் அதிகமான பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மீட்புப் படகுகள், ஹெலிகாப்ட்டர்கள் என மீட்புப் பணிகளுக்குத் தேவையான போக்குவரத்துகள் தயார்நிலையில் உள்ளன.
தாய்லந்தின் தெற்குப் பகுதியிலும் கனத்த மழை.
இதுவரை நால்வர் மாண்டதாய்த் தெரிவிக்கப்பட்டுள்ளது.
240,000க்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்திரா மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திலும் நிலச்சரிவுகளிலும் சுமார் 30 பேர் மாண்டனர்.
அவசர நிலைக்கான அறிவிப்பு அங்கு விடுக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : AFP