Skip to main content
பிரேசில் வெள்ளம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரேசில் வெள்ளம் - 100 பேர் மாண்டனர்

வாசிப்புநேரம் -
பிரேசில் வெள்ளம் - 100 பேர் மாண்டனர்

(படம்: Anselmo CUNHA / AFP)

பிரேசிலின் தெற்கே பல நாள்களாக நீடிக்கும் வெள்ளத்தில் மாண்டோர் எண்ணிக்கை நூறைக் கடந்துள்ளது.

புயலினால் காணாமல் போனவர்களைத் தேடி மீட்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தெற்கில் உள்ள Rio Grande do Sul மாநிலத்தில் சுமார் 400 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர்.

160,000க்கும் அதிகமானோர் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர்.

குடிநீரும், மின்சாரமும் இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.

தொலைபேசி, இணையத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அதனால் யாரையும் அழைத்து உதவி கேட்க வழியின்றிப் பலர் தவிக்கின்றனர்.

பேரிடரில் மாண்டோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று மாநில ஆளுநர் கூறினார்.

ராணுவ வீரர்கள், தீயணைப்புப் படையினர், காவல்துறையினர், தொண்டூழியர்கள் என்று சுமார் 15,000 பேர் மாநிலம் முழுதும் மக்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுப்பட்டுள்ளனர்.
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்