பாகிஸ்தானில் 5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது - மாண்டோர் எண்ணிக்கை 27க்கு உயர்ந்தது
வாசிப்புநேரம் -

AFP
பாகிஸ்தானின் கராச்சி நகரில் 5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 27 பேர் மாண்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நேற்று முன்தினம் (4 ஜூலை) நடந்தது.
இடிபாடுகள் பெருமளவில் அகற்றப்பட்டதாக அந்நாட்டின் மீட்புச் சேவைத் துறையின் பேச்சாளர் ஒருவர் AFPயிடம் கூறினார்.
கட்டடத்தின் பாதுகாப்பு ஏற்கனவே சந்தேகிக்கப்பட்டது. 2022, 2024ஆம் ஆண்டுகளுக்கு இடையே அங்கியிருந்தோரை வெளியேறச் சொல்லி அறிக்கைகள் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் அந்த அறிக்கைகள் தங்களுக்குக் கிடைக்கவில்லை எனச் சில வீட்டு உரிமையாளர்களும் குடியிருப்பாளர்களும் AFP செய்தியிடம் பகிர்ந்தனர்.

ஆதாரம் : AFP