உலகம் exclusive
மலேசியாவில் தீபாவளிக்கு வீட்டுக்கு அழைத்து விருந்து வைப்பது குறைந்து வருகிறது
வாசிப்புநேரம் -
படம்: Envato
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
தீபாவளி வந்துவிட்டாலே உற்றார் உறவினர்களையும் நண்பர்களையும் வீட்டுக்கு அழைத்து விருந்து வைப்பது வழக்கம்.
அந்தப் பழக்கம் வழக்கொழிந்து வருகிறது.
வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்து உபசரிப்பதில் பிரபலமான நாடு மலேசியா. ஆனால் அங்கும் அந்தப் பழக்கம் மெல்ல மறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
அதன் காரணங்களைச் சிலரிடம் கேட்டறிந்தது, 'செய்தி'.
"10,15 ஆண்டுக்கு முன்பு சுமார் 100 பேருக்குச் சமைக்கும் கிராமத்து வழக்கம் இருந்தது. ஆனால் நகரத்துக்குக் குடிபெயர்ந்த பிறகு அதைக் கடைப்பிடிக்க முடியவில்லை," என்றார் திருமதி விஜி.
அதிகரிக்கும் விலைவாசியால் விருந்து வைப்பது சிரமமாகிவிட்டது என்று கூறினார் திருவாட்டி லெட்சுமி.
"வெவ்வேறு மாநிலங்களில் வசிக்கும் காரணத்தால் உறவினர்களைத் தீபாவளிக்குச் சந்திப்பது கடினமாகிவிட்டது," என்று திரு மூர்த்தி சொன்னார்.
"அடுக்குமாடி வீடுகளில் போதிய அளவு இடம் இல்லை, அதனால் விருந்துக்கு யாரையும் அழைக்க முடியவில்லை," எனத் திருமதி கண்ணகி கூறினார்.
மொத்தத்தில் பல காரணங்கள்.
மக்கள் சந்திப்பது குறைகிறது. தீபாவளி போன்ற பண்டிகைகளை அனைவரும் சேர்ந்து கொண்டாடும் பாரம்பரியம் மெல்ல மறையத் தொடங்கிவிட்டது என்பது பொது மக்களிடம் பேசிப் பார்க்கும்போது தெரிய வருகிறது.

ஆதாரம் : Mediacorp Seithi