Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மலைப்புறக் காடுகள் மறைந்து போகின்றன - ஆய்வு

வாசிப்புநேரம் -
மரத்தை வெட்டுதல், காட்டுத் தீ, விவசாயம், ஆகியவை மலைப்புறக் காடுகளை அழிப்பதாக நேற்று முன்தினம் (17 மார்ச்) வெளிவந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

அவை உலகின் பறவைகள், பாலூட்டிகள், நில, நீர்வாழ் உயிரினங்களில் 85 விழுக்காட்டுக்கு வசிப்பிடமாகத் திகழ்வதாக ஆய்வு தெரிவித்தது.

2000ஆம் அண்டில் பூமியின் 1.1 பில்லியன் ஹெக்டர் பரப்பளவில் மலைப்புற காடுகள் இருந்ததாக Cell Press சஞ்சிகை One Earth தெரிவித்தது.

ஆனால் குறைந்தது 78.1 மில்லியன் ஹெக்டர் அளவிலான காடுகள், 2000ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆண்டுவரை அழிந்திருப்பதாக ஆய்வு குறிப்பிட்டது.

அரிதான, அழிந்துவரும் உயிரினங்களுக்கு அடைக்கலமாக விளங்கும் காட்டுப்பகுதிகள் அழிந்துபோனதை எண்ணி ஆய்வாளர்கள் கவலை தெரிவித்தனர்.

மலைப்பகுதிகளின் உயரமும் சரிவுகளும் மனிதர்கள் காடுகளைச் சுயநலத்திற்குப் பயன்படுத்துவதைத் தவிர்த்துள்ளது.

ஆனாலும் அவற்றை மரத்திற்கும் விவசாயத்திற்கும் பயன்படுத்தும் போக்கு அதிகமாகத் தொடர்ந்து வருகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்