Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

புதுடில்லியில் புகைமூட்டம் மோசமான நிலையை எட்டியதற்குக் காரணம்?

வாசிப்புநேரம் -
புதுடில்லியில் புகைமூட்டம் மோசமான நிலையை எட்டியதற்குக் காரணம்?

(படம்: AFP)

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் புகைமூட்டம் படு மோசமான நிலையை எட்டியுள்ளது.

பள்ளிகளில் நேரடியாக வகுப்புகள் நடத்தப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்படும் அளவுக்கு அது மோசமாகியுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை புதுடில்லி, தென்னிந்திய மாநிலங்கள் சிலவற்றில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையைத் தொடுவது வழக்கமாகிவிட்டது.

இம்முறை புதுடில்லியில் நிலைமை இன்னும் மோசமடைந்திருக்கிறது.

சென்ற புதன்கிழமை (13 நவம்பர்) புதுடில்லியின் பல பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு 500ஐத் தாண்டியது.

காற்றுத் தரக் குறியீடு 100க்கும் கீழ் இருந்தால் அது பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது.

காற்றில் PM2.5 தூய்மைக்கேட்டுப் பொருள்கள், உலகச் சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரைக்கும் அளவைவிட அதிகமாக இருந்தால் அவை நுரையீரல் வாயிலாக ரத்தத்தை அடைந்து பலதரப்பட்ட நோய்களை ஏற்படுத்தலாம்.

புதுடில்லியில் புகைமூட்டம் மோசமான நிலையை எட்டியதற்குக் காரணங்கள்?

📌 பக்கத்து வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் வயல்வெளிகளுக்குத் தீமூட்டி செப்பனிடுகின்றனர்.

📌 தொழில்வளமும் கட்டுமானப் பணிகளும் அதிகரித்துள்ளன.

📌 சுற்றுப்புறம் தொடர்பிலான சட்டங்கள் அதிகம் நடைமுறைப்படுவதில்லை.

📌 பல நிறுவனங்கள் புகைமூட்டத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளைப் பின்பற்றுவதில்லை.

📌 வாகனங்கள் அதிகரித்துள்ளன; அவை வெளியிடும் நச்சுப்புகை கூடியுள்ளது.

முடிந்தவரை மக்கள் வெளிப்புறங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சென்ற ஆண்டு (2023) உலகிலேயே ஆக மோசமான புகைமூட்டம் கொண்ட நகரங்களின் பட்டியலில் புது டில்லி முதலிடம் பிடித்தது.
 
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்