டில்லி ஹோட்டல் தீ - கட்டட உரிமையாளர் கைது
வாசிப்புநேரம் -
(படம்: Arun SANKAR / AFP)
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் தீப்பற்றிய ஹோட்டலின் உரிமையாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தீயில் 21 பேர் மாண்டனர். அவர்களில் 18 பேர் வெளிநாட்டவர்.
ஹோட்டல் உரிமையாளருக்கும் அவரது மனைவிக்கும் கைது ஆணை பிறப்பித்திருப்பதாகக் காவல்துறை முன்னதாகக் கூறியது.
தெற்கு டில்லியில் உள்ள அந்த ஐந்து மாடி ஹோட்டலில் நேற்றுக் காலை தீ மூண்டது.
அருகில் மருத்துவச் சிகிச்சைக்காக வரும் வெளிநாட்டவர் அந்த ஹோட்டலில் தங்குவது வழக்கம் என்று கூறப்படுகிறது.
பல பாதுகாப்பு மீறல்கள் நடந்திருப்பதாகக் காவல்துறை கூறியது.
உரிமையாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு கொண்டுவருவதற்கான முதல் தகவல் அறிக்கை பதிவாகியுள்ளது.
ஆறு அறைக்கு மட்டுமே அனுமதி பெற்ற ஹோட்டலில் 25 அறைகள் இருந்தன. ஒரு கதவு மட்டுமே இருந்தது, சன்னல்கள் பூட்டப்பட்டிருந்தன. உள்ளே சிக்கிய மக்களை மீட்பதில் பெருஞ்சிக்கல் ஏற்பட்டது என்கின்றனர் அதிகாரிகள்.

ஆதாரம் : AFP