புதுடில்லியில் சட்டமன்றத் தேர்தல்

AP Photo
இந்திய தலைநகர் டில்லியில் சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பு நடைபெறுகிறது.
டில்லியில் எந்தக் கட்சி அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் என்பது தேர்தலின் முடிவில் தெரியவரும்.
சட்டமன்றத்தின் 70 இடங்களுக்கும் வாக்களிப்பு நடைபெறுகிறது.
13,000 வாக்குச்சாவடிகளில் 15 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
ஆளும் ஆம் ஆத்மி கட்சி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன.
ஆளுங்கட்சி பத்தாண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் உள்ளது.
திரு அரவிந்த் கெஜ்ரிவாலுக்குப் (Arvind Kejriwal) அதனை வழி நடத்துகிறார்.
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒருவர் புதுடில்லியில் 26 ஆண்டுகளுக்கு முன்னர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தார்.
கடந்த பத்தாண்டுகளில் அக்கட்சி 7 நாடாளுமன்ற இடங்களை வென்றது. ஆனால் சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மிக் கட்சி மாபெரும் வெற்றியைப் பெற்றது.