தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
இந்திய தலைநகர் புது டில்லியில் உள்ள தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் வழி வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பிரஷாந்த் விஹார் வட்டாரத்தில் வெடிப்புச் சம்பவம் ஏற்பட்ட மறுநாள் பள்ளிக்கு அந்த மிரட்டல் வந்துள்ளது.
வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயமுற்றார்.
பள்ளியை நன்கு சோதனை செய்த பிறகு,வெடிகுண்டு மிரட்டல் போலியான ஒன்று என டில்லி தீயணைப்புச் சேவை அதிகாரிகள் கூறினர்.
அந்த மிரட்டல் குறித்து டில்லி காவல்துறையிடமிருந்து காலை மணி 10.57க்கு அழைப்பு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்குரிய பொருள்கள் எதுவும் பள்ளியில் கண்டுபிடிக்கப்படவில்லை.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.