Skip to main content
வெள்ளத்தில் சிக்கிய சிறுவன்.. காப்பாற்ற விரைந்த ஐவர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

வெள்ளத்தில் சிக்கிய சிறுவன்.. காப்பாற்ற விரைந்த ஐவர்

வாசிப்புநேரம் -
வெள்ளத்தில் சிக்கிய சிறுவன்.. காப்பாற்ற விரைந்த ஐவர்

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்

சீனாவின் குவாங்ஸோ (Guangzhou) நகரில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்...

சைக்கிளுடன் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனைக் காப்பாற்றியுள்ளனர் உணவு விநியோக ஓட்டுநர்கள்.

சமூக ஊடகத்தில் பகிரப்படும் காணொளியில் குவாங்ஸோ கடைத்தெருவில் வெள்ளத்தைக் காணமுடிகிறது.

கனமழை பெய்கிறது.

வேகமான நீரோட்டத்தில் சிறுவன் சைக்கிளுடன் காணாமல் செல்கிறார்.

அதைக் கண்ட ஒருவர் சிறுவனைக் காப்பாற்ற வெள்ளத்தில் விரைகிறார்.

மேலும் ஒருவர்..இருவர்...என மொத்தம் ஐவர் சிறுவனைக் காப்பாற்றச் செல்கின்றனர்.

அவர்களில் ஒருவர் கையில் சிறுவனுடன் தெருவைக் கடப்பதைக் காணொளியில் காணமுடிகிறது.

இணையவாசிகள் பலர் ஐவரின் செயலைப் பாராட்டினர்.

அண்மை நாள்களில் சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள குவாங்டாங் (Guangdong) மாநிலத்தில் கனமழை பெய்தது.

வெள்ளத்தைச் சமாளிக்கும் நடவடிக்கையில் உள்ளூர் அதிகாரிகள் இறங்கினர்.

மாநிலத் தலைநகர் குவாங்ஸோவில் நேற்று முன்தினம் (15 மே) திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்