Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

டென்மார்க் துப்பாக்கிச்சூடு: மனநலக் காப்பகத்தில் தடுப்புக் காவலில் சந்தேக நபர்

வாசிப்புநேரம் -


டென்மார்க் தலைநகர் கோப்பன்ஹேகனில் கடைத் தொகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேக நபர் மனநலக் காப்பகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

குறைந்தது 24 நாள்களுக்கு அவர் கண்காணிக்கப்படுவார்.

ஸ்காண்டிநேவிய வட்டாரத்தின் ஆகப்பெரிய கடைத்தொகுதிகளில் ஒன்றான Field'sஇல் நடந்த அந்தத் தாக்குதலில் மூவர் மாண்டனர்.

4 பேர் கடுமையாக காயமுற்றனர்.

22 வயது சந்தேக நபரிடம் துப்பாக்கிகளும் ஒரு கத்தியும் இருந்ததாக காவல்துறை கூறியது.

சம்பவத்துக்கு முன் அவர் மனநல உதவியைப் பெற முயற்சி செய்ததாக வெளியான தகவல்களை அதிகாரிகள் இன்னும் உறுதிசெய்யவில்லை.

தாக்குதலுக்குப் பயங்கரவாதத் தொடர்பு ஏதும் இல்லை என்று காவல்துறை உறுதி செய்தது.

சுடப்பட்டவர்கள் குறிப்பிட்ட நோக்கமின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் சந்தேக நபருக்கு உடந்தையாக யாரும் இருந்ததுபோல் தெரியவில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்