Skip to main content
"ஓய்வுபெறத் தயாராக இல்லை"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"ஓய்வுபெறத் தயாராக இல்லை" - விராட் கோலி

வாசிப்புநேரம் -
"ஓய்வுபெறத் தயாராக இல்லை" - விராட் கோலி

(கோப்புப் படம் REUTERS/Satish Kumar)

இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி (Virat Kohli) இப்போதைக்கு ஓய்வுபெறப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

சென்ற ஆண்டு (2024) அனைத்துலக T20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறப் போவதாக அவர் அறிவித்திருந்தார்.

பிறகு இந்திய பிரிமியர் லீக் விளையாட்டுகளில் Royal Challengers Bengaluru அணிக்காக விளையாடி வருகிறார்.

தாம் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவது சாதனைக்காக அல்ல என்று திரு கோலி சொன்னார்.

"விளையாட்டின்மீது நான் கொண்ட அன்பு, அதை விளையாடும்போது எனக்குக் கிடைக்கும் திருப்தி, சந்தோஷம்" என்றார் அவர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடிய டெஸ்ட் தொடரில் 3-1 என இந்தியா தோல்வியடைந்தது.

அதைத் தொடர்ந்து கோலி அளித்த பேட்டியில் ஓய்வுபெறும் திட்டங்களைப் பற்றிப் பேசினார்.
ஆதாரம் : Reuters

மேலும் செய்திகள் கட்டுரைகள்