Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

செலவுக் குறைப்பு நடவடிக்கைகளைத் தொடரவிருக்கிறோம்: Disney

வாசிப்புநேரம் -

Disney அதன் நிறுவனத்தில் புதிதாக ஊழியர்களை வேலைக்கு எடுக்கத் திட்டமில்லை என்று கூறுகிறது.

அது அண்மையில் தலைமை நிர்வாகத்தில் மாற்றம் செய்தது.

தலைமை நிர்வாக அதிகாரி பாப் இகர் (Bob Iger) இதை உறுதி செய்ததாகக் கூறப்படுகிறது.

அவர் தலைமை நிர்வாக அதிகாரியாக மறுநியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இகருக்கு முன்பு இருந்த தலைமை நிர்வாக அதிகாரி சில செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்தார்.

அதைத் தொடரத் திட்டமிட்டுள்ளதாகத் திரு இகர் கூறினார்

"சந்தாதாரர்களைப் பெறுவதில் கவனம் செலுத்துவதைவிட, காணொளிச் சேவைகளை லாபகரமாக்குவதே குறிக்கோள்" என்கிறார் திரு இகர்.

ஏற்கனவே உள்ள திரைப்பட, தொலைக்காட்சி வணிகத்தை விட்டுக்கொடுக்காமல் தனது காணொளிச் சேவைகளை வளர்க்க Disney முயல்கிறது.

ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்