Skip to main content
Wimbledon பொதுவிருதுப் போட்டியில் 100ஆவது வெற்றிகண்ட ஜோக்கோவிச்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

Wimbledon பொதுவிருதுப் போட்டியில் 100ஆவது வெற்றிகண்ட ஜோக்கோவிச்

வாசிப்புநேரம் -
செர்பிய டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச் (Novak Djokovic) விம்பிள்டன் (Wimbledon) பொதுவிருதுப் போட்டியில் 100ஆவது வெற்றி கண்டுள்ளார்.

விம்பிள்டன் வரலாற்றில் 100ஆவது வெற்றிக்கண்ட மூன்றாவது விளையாட்டாளர் அவர்.

இதற்கு முன்னர் மார்ட்டினா நவரத்திலோவா (Martina Navratilova) ரோஜர் ஃபெடரர் (Roger Federer) ஆகிய இருவரும் அந்தச் சாதனையைப் படைத்துள்ளனர்.

நேற்று நடந்த round of 32 ஆட்டத்தில் ஜோக்கோவிச் மியோமிர் கெச்மானோவிச்சை (Miomir Kecmanovic) 6-3, 6-0, 6-4 எனும் ஆட்டக்கணக்கில் தோற்கடித்தார். அவர் round of 16 சுற்றுக்குத் தகுதிபெற்றார்.

38 வயது ஜோக்கோவிச் அடுத்து அலெக்ஸ் டெ மினோருடன் (Alex de Minaur) மோதவிருக்கிறார். வெற்றிபெறும் விளையாட்டாளர் விம்பிள்டன் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறுவார்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்