Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வுபெறும் நடாலுக்குப் புகழாரம் சூட்டிய பிரபலங்கள்

வாசிப்புநேரம் -
டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வுபெறும் நடாலுக்குப் புகழாரம் சூட்டிய பிரபலங்கள்

(படம்: AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறவிருப்பதாக அறிவித்துள்ள ரஃபாயல் நடாலுக்கு (Rafael Nadal) ரோஜர் ஃபெடரெரும் (Roger Federer) நோவாக் ஜோக்கோவிச்சும் (Novak Djokovic) புகழாரம் சூட்டியுள்ளனர்.

ஸ்பானியரான 38 வயது நடால் நேற்று (10 அக்டோபர்) அவரது முடிவை அறிவித்தார்.

மலாகாவில் (Malaga) நடைபெறவுள்ள டேவிஸ் கிண்ண இறுதிச்சுற்றுக்குப் பின்னர் அவர் ஓய்வுபெறுவார்.

மில்லியன்கணக்கான சிறுவர் சிறுமியர் டென்னிஸ் விளையாடுவதற்கு நடால் தூண்டுகோலாய் இருந்ததாகப் பாராட்டினார் ஜோக்கோவிச்.

அதுதான் ஒருவர் விரும்பும் மிகப்பெரிய சாதனையாக இருக்கமுடியும் என்றார் ஜோக்கோவிச்.

மலாகாவுக்குச் சென்று நடாலின் ஆட்டத்தைப் பார்த்து அவருக்கு மரியாதை செலுத்தப்போவதாகச் சொன்னார் ஜோக்கோவிச்.

நடாலின் டென்னிஸ் வாழ்க்கை சிறப்பானது என்று மெச்சினார் ஃபெடரெர். அவர் ஓய்வுபெறும் நாள் வரக்கூடாது என்று விரும்பியதாக ஃபெடரெர் கூறினார்.

விளையாட்டில் செய்த சாதனைகளுக்கும் விட்டுச்சென்ற மறக்கமுடியாத நினைவுகளுக்கும் நடாலுக்கு நன்றி கூறினார் ஃபெடரெர்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்