Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால் அமெரிக்க டென்னிஸ் போட்டிகளைத் தவறவிட்டதில் வருத்தம் இல்லை' - ஜோக்கோவிச்

வாசிப்புநேரம் -

பிரபல டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச் (Novak Djokovic) COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால் அமெரிக்க டென்னிஸ் போட்டிகளைத் தவறவிட்டதில் வருத்தம் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவினுள் நுழைய COVID-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டிருக்க வேண்டும்.

தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாததால் Indian Wells, Miami போட்டிகளில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை.

Indian Wells போட்டியை வென்ற கார்லோஸ் அல்கரஸ் (Carlos Alcaraz) உலகத் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தார்.

அவருக்கு முன்பு ஜோக்கோவிச் முதல் இடத்தில் இருந்தார்.

CNN செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், வருத்தங்கள் நம்மை பின்தங்கிவிடவும் கடந்த காலத்திலேயே வாழவும் செய்யும் என்று கூறினார்.

தமக்கு அதைச் செய்ய விருப்பமில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

அவர் அல்கரஸிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

இந்த ஆண்டு அமெரிக்கப் பொதுவிருதுப் போட்டிக்கு முன்பாகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று நம்புவதாக ஜோக்கோவிச் சொன்னார்.

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்