Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

டென்னிஸ் வீரர் நோவாக்ஜோக்கோவிச்சின் விசா விண்ணப்பம் குறித்து நாளை விசாரணை தொடரும்

வாசிப்புநேரம் -
டென்னிஸ் வீரர் நோவாக்ஜோக்கோவிச்சின் விசா விண்ணப்பம் குறித்து நாளை விசாரணை தொடரும்

(படம்: Brandon MALONE / AFP)

டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச்சை (Novak Djokovic), ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றுவது பற்றிய நீதிமன்ற அவசர விசாரணை முடிவேதும் இல்லாமல் நிறைவடைந்திருக்கிறது.

நாளை காலை முழு விசாரணை தொடரும்.

ஆஸ்திரேலியக் குடிநுழைவுத்துறை அமைச்சர், இரண்டாவது முறை விசாவை ரத்து செய்த பிறகு,ஜோக்கோவிச் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

ஆஸ்திரேலியப் பொது விருதைத் தற்காக்க செர்பிய வீரர் ஜோக்கோவிச்சை விளையாட அனுமதிப்பது பற்றி நாளை மறுநாளுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று அவருடைய வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் கோரினார்.

இன்று அவர் குடிநுழைவுத்துறை அதிகாரிகளைச் சந்திக்கிறார்.

ஆஸ்திரேலியப் பொது விருதுப் போட்டி தொடங்கவிருக்கும் நிலையில், ஜோக்கோவிச்சின் விசா இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டது.

21 ஆவது முறை கிராண்ட் ஸ்லாம் (Grand Slam) பட்டம் வெல்ல வேண்டும் என்ற ஜோக்கோவிச்சின் கனவு தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால் கேள்விக்குள்ளாகி இருக்கிறது.

ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றப்படுவதற்குச் சாத்தியமுள்ள ஜோக்கோவிச் மூன்று ஆண்டுகள் அங்கு செல்லவும் தடை விதிக்கப்படலாம்.

பொது நலனைக் கருத்தில் கொண்டு ஜோக்கோவிச்சின் விசா ரத்து செய்யப்பட்டதாக ஆஸ்திரேலியக் குடிநுழைவுத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் (Alex Hawke) கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa