நேப்பாள வெள்ளம் - குவியும் சடலங்கள்... அடையாளம் காணக் கைகொடுக்கும் சிங்கப்பூர்
வாசிப்புநேரம் -
படம்: CNA/Jack Board
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
நேப்பாள வெள்ளத்தில் மாண்டோரை அடையாளம் காண்பது மிகப்பெரிய சவால்.
மரபணு மாதிரிகள், கைரேகை, புகைப்படங்கள் உதவுகின்றன.
அந்நாட்டு அதிகாரிகளுக்கு இந்தப் பெரும் முயற்சியில் அனைத்துலகக் குழுக்களுடன் சிங்கப்பூர்க் காவல்துறையும் கைகொடுக்கிறது.
சிங்கப்பூரைச் சேர்ந்த 35 தடயவியல் நிபுணர்கள் காத்மாண்டு (Kathmandu) சென்றுள்ளனர்.
இந்தியா, சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் அவர்கள் பணியாற்றுகின்றனர்.
அடையாளம் காணப்படாத உடல்கள் சவக்கிடங்குகளில் குவிகின்றன.
இதுவரை கிட்டத்தட்ட 1,300 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
அவற்றில் நூற்றுக்கும் குறைவானவையே அடையாளம் காணப்பட்டு அன்புக்குரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
1,270 அடையாளம் தெரியாத உடல்களின் தகவல்களை அதிகாரிகள் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
மாண்டோருடன் சம்பந்தப்பட்டவர்கள் உடல்களை அடையாளம் காண அவை உதவும் என்ற நம்பிக்கையில்...
பல உடல்களை மீட்க உறவினர்கள் இன்னமும் முன்வரவில்லை.
சிட்வான் (Chitwan) நகரில் குவியும் சடலங்களைச் சமாளிக்க அதிகாரிகள் திணறுகின்றனர்.
மரபணு மாதிரிகளை எடுத்துவிட்டு சடலங்களை அதிகாரிகள் தற்காலிகமாகப் புதைத்து வைக்கின்றனர்.

ஆதாரம் : CNA