Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

குழந்தைகள், பிள்ளைகளுக்குக் கூடுதல் தடுப்பூசி தேவைப்படுமா?

வாசிப்புநேரம் -
குழந்தைகள், பிள்ளைகளுக்குக் கூடுதல் தடுப்பூசி தேவைப்படுமா?

(படம்: CNA/Hanidah Amin)

ஆரோக்கியமான குழந்தைகளுக்கும் பிள்ளைகளுக்கும் COVID-19 booster தடுப்பூசிகள் தேவைப்படுவதாக ஆதாரமில்லை என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

சில நாடுகள் பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடத் தொடங்கியதைத் தொடர்ந்து நிறுவனம் அவ்வாறு கூறிற்று.

இஸ்ரேலில் 12 வயதுள்ள பிள்ளைகளுக்கு booster தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

அமெரிக்காவில் 12 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட பிள்ளைகளுக்கு Pfizer தடுப்பூசி போட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியிலும் ஹங்கேரியிலும் 12 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்டோருக்கு booster தடுப்பூசி போடப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிலகாலம் கழித்து தடுப்பூசிகள் வழங்கும் எதிர்ப்புச்சக்தி குறைவதாகக் கூறப்படுகிறது. 

உலக அளவிலும் ஒம்க்ரான் நோய்ப்பரவல் மோசமாகி வருகிறது.

இருப்பினும் யாருக்கெல்லாம் booster போடப்படவேண்டும் என்பதை நிர்ணயிக்கக் கூடுதல் ஆராய்ச்சி நடத்தவேண்டும் என்று உலகச் சுகாதார நிறுவனம் கூறுகிறது.

அதிகமான தேவையுள்ளோருக்கே booster தடுப்பூசிகள் ஒதுக்கப்படவேண்டும் என்று நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa