Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பிரசவத்தில் ரத்தம் வழிந்த நிலையில் இருந்த பெண்ணைப் பாதியில் விட்டுச்சென்ற மருத்துவர்கள்

வாசிப்புநேரம் -
பிரசவத்தில் ரத்தம் வழிந்த நிலையில் இருந்த பெண்ணைப் பாதியில் விட்டுச்சென்ற மருத்துவர்கள்

(படம்: unsplash)

மலேசியாவில் பிரசவத்தின்போது கடுமையாக ரத்தம் வழிந்தகொண்டிருந்த பெண்ணை மருத்துவர்கள் பாதியில் விட்டுச்சென்றதற்கு இழப்பீடு வழங்கும்படி ஒரு மருத்துவமனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

புனிதா மோஹன் (Punitha Mohan) என்ற பெண்ணின் குடும்பத்துக்கு 6 மில்லியன் மலேசிய ரிங்கிட் இழப்பீடு வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி நடந்த சம்பவத்தில் புனிதா மாண்டதாக The Star ஊடகம் சொன்னது.

அவர் குழந்தையை ஈன்றெடுத்தவுடன் கடுமையாக ரத்தத்தை இழக்கத் தொடங்கினார்.

புனிதா சீரான நிலையில் உள்ளதாகக் கூறிய இரண்டு மருத்துவர்கள் அவரைத் தாதிகளின் கவனிப்பில் விட்டுச்சென்றனர்.

மருத்துவர்கள் அப்போது தாகத்தைத் தணிப்பதற்காகத் தண்ணீர் அருந்தச் சென்றனர்.

நோயாளியைக் கவனிக்கத் தேவையான தகுதி அந்தத் தாதிகளுக்கு இல்லை என்றும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

பின்னர் புனிதா இக்கட்டான நிலையில் இருப்பதை அறிந்த குடும்பத்தார் அவரை வேறு மருத்துவமனையில் சேர்த்ததாக The Star கூறியது.

எனினும் புனிதா மாண்டார்.

பிரசவம் பார்ப்பதில் அதிக அனுபவம் இருந்தாலும் மருத்துவர்கள் அதிலிருக்கும் அபாயங்களைக் கருத்தில் கொள்ளவில்லை என்று நீதிபதி சாடினார்.

நோயாளியைக் கவனிக்கத் தவறியதற்காக மருத்துவர்களை அவர் கண்டித்தார்.

ஆதாரம் : Others/The Star

மேலும் செய்திகள் கட்டுரைகள்