உரிமையாளருக்கு 2 மாதங்களாகக் காத்திருக்கும் நாய்
வாசிப்புநேரம் -

(படம்: Facebook/Mari-Mo Photography)
தாய்லந்தில் உரிமையாளருக்காக 2 மாதங்களாகக் காத்திருக்கும் ஒரு நாய் இணையவாசிகளின் மனத்தை நெகிழ வைத்துள்ளது.
'Moo Daeng' வீடற்ற ஒருவரின் நாய்.
அதுவும் உரிமையாளரும் நாக்கோன் ரட்சாசிமா (Nakhon Ratchasima) மாநிலத்தில் உள்ள 7-Eleven கடை வாசலில் படுத்துக்கொள்வதுண்டு.
உரிமையாளர் நவம்பர் மாதத்தில் இறந்ததாக The Nation ஊடகம் சொன்னது.
ஆனால் அவர் ஒரு நாள் திரும்பி வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் Moo Daeng எங்கும் செல்லவில்லை.
கடையின் உரிமையாளர் நாயைப் பார்த்துகொள்கிறார். அதற்குப் போர்வையும் அளித்து உணவும் கொடுக்கிறார்.
மற்ற நாய்ப் பிரியர்களும் உணவு அளிக்கின்றனர்.
Moo Daengஇன் கதை அண்மையில் Facebook பக்கத்தில் பகிரப்பட்டது.
ஒரு பதிவு 23,000 விருப்பக்குறிகளையும் 1,200 கருத்துகளையும் பெற்றது.
எவ்வாறு ஜப்பானில் Hachi என்ற நாய் அதன் உரிமையாளருக்காகத் தொய்வின்றிக் காத்திருந்ததோ அதைப் போன்று Moo Daeng நாயும் காத்திருக்கிறது என்று இணையவாசிகள் கருத்துரைத்தனர்.

ஆதாரம் : Others/The Nation