Skip to main content
வீட்டுக்குள் திருடன்... பொம்மையுடன் ஓடிவந்த நாய்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

வீட்டுக்குள் திருடன்... பொம்மையுடன் ஓடிவந்த நாய்

வாசிப்புநேரம் -
வீட்டுக்குள் திருடன்... பொம்மையுடன் ஓடிவந்த நாய்

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்: IG/danterowley

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வீட்டைக் காவல்காக்கும் தெய்வங்கள் என்று நாய்கள் போற்றப்படுகின்றன...

ஆனால்...வாலை ஆட்டிக்கொண்டு ஒரு திருடனை வீட்டிற்குள் வரவழைக்கும் நாயைப் பார்த்ததுண்டா?

அமெரிக்காவின் கலிஃபோர்னியா (California) மாநிலத்தில் அதுதான் நடந்தது.

ஓர் ஆடவர் ஓரு தம்பதியின் வீட்டிற்குள் நுழைகிறார்.

அந்த நேரத்தில் தம்பதி வெளியூரில் இருந்தனர்.

வீடு முழுவதும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

திருட வந்தவர் வீட்டிலிருந்த குளிர்பதனப்பெட்டியிலிருந்து தின்பண்டங்களை எடுத்துச் சாப்பிடுவது முதல் மெத்தை விரித்துப் படுத்துத் தூங்குவது வரை அனைத்தும் கேமராக்களில் பதிவாகின.

ஆனால் மற்றொரு வேடிக்கையான தருணமும் கேமராவில் பதிவானது.

தம்பதியின் நாய் வாயில் ஒரு பொம்மையுடன் வாலாட்டிக்கொண்டே திருடன் அருகில் வந்தது.

நேஷ் (Nash) என்ற பெயர்கொண்ட நாய், விடாப்பிடியாக அந்தத் திருடனைத் தன்னோடு விளையாடக் கூப்பிடுவதுபோல் இருந்தது.

ஆனால், திருடன் நேஷை சிறிதும் கண்டுகொள்ளவில்லை.

இவை அனைத்தையும் கேமராவின் வழி பார்த்த தம்பதி உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

காவல்துறையினர் துப்பாக்கியோடு வீட்டிற்குள் நுழைவதையும் பாராமல் நேஷ் மீண்டும் அந்தப் பொம்மையுடன் அதிகாரிகள் அருகே செல்லும் அந்த வேடிக்கையான தருணத்தையும் காணொளியில் காணமுடிந்தது.

கோல்டன் ரிட்ரீவர் (Golden Retriever) இனத்தைச் சேர்ந்த நேஷ், திருடனுடன் விளையாடத் துடிக்கும் காட்சியைத் தம்பதி அவர்களது Instagram பக்கத்தில் பதிவிட்டனர்.

"நம் நாய் பத்திரமாக இருப்பதே நமக்குப் பெரும் மகிழ்ச்சி" என்று தம்பதி பதிவில் குறிப்பிட்டனர்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்