இடைத்தவணைத் தேர்தல் முடிவுகளை ஏற்கத் தயார்: டிரம்ப்
(கோப்புப் படம்: Jim WATSON / AFP)
This audio is generated by an AI tool.
அமெரிக்க இடைத்தவணைத் தேர்தலின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளத் தாம் தயாராக இருப்பதாக அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
செனட் சபையையும் மக்களவையையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்ற வாய்ப்பிருப்பதாக முன்னோடி முடிவுகள் காட்டுகின்றன.
செனட் சபையில் முன்னிலை...
ஜனநாயகக் கட்சி - 50
குடியரசுக் கட்சி - 39
பெரும்பான்மை பெற 50 இடங்கள் தேவை.
மக்களவையில் முன்னிலை...
ஜனநாயகக் கட்சி - 152
குடியரசுக் கட்சி - 95
பெரும்பான்மை பெற 218 இடங்கள் தேவை.
தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளன.
"நான் முடிவுகளை ஏற்கத் தயார். நாங்கள்
ஜனநாயகக் கட்சியுடன் சேர்ந்து பணியாற்றுவோம். நாங்கள் அதைச் சமாளிப்போம்," என்று திரு டிரம்ப் The New York Times ஊடகத்திடம் சொன்னார்.