Skip to main content
ஜப்பானியப் பிரதமருக்கு டிரம்ப் ஆதரவு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஜப்பானியப் பிரதமருக்கு டிரம்ப் ஆதரவு

வாசிப்புநேரம் -
ஜப்பானியப் பிரதமருக்கு டிரம்ப் ஆதரவு
Reuters/Evelyn Hockstein

ஜப்பானில் எதிர்வரும் தேர்தலுக்கு முன்னதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) ஜப்பானியப் பிரதமர் சனாயே தக்காய்ச்சிக்கு (Sanae Takaichi) தம்முடைய ஆதரவை வழங்கியுள்ளார்.

அடுத்த மாதம் வெள்ளை மாளிகைக்கு வரும்படி அவருக்குத் திரு டிரம்ப் அழைப்பு விடுத்தார்.

திருவாட்டி தக்காய்ச்சி விவேகமான தலைவர் என்றும் வலிமையானவர் என்றும் திரு டிரம்ப் பாராட்டினார்.

திருவாட்டி தக்காய்ச்சிக்கு முழு ஆதரவு வழங்குவதில் தாம்  மகிழ்ச்சி கொள்வதாக அவர் சொன்னார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை (8 பிப்ரவரி) நடைபெறும் 
பொதுத்தேர்தலில் திருவாட்டி தக்காய்ச்சி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று, வெற்றியடையக்கூடும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

திருவாட்டி தக்காய்ச்சியின் ஆளும் கூட்டணி கீழவையில் மட்டுமே பெரும்பான்மையைக் கொண்டுள்ளது.

மேலவையில் அதற்குச் செல்வாக்கு இல்லை.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்