Skip to main content
அதிபர் டிரம்ப்பின் பழைய வீடு $2.4 மில்லியனுக்கு விற்றது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

அதிபர் டிரம்ப்பின் பழைய வீடு $2.4 மில்லியனுக்கு விற்றது

வாசிப்புநேரம் -
அதிபர் டிரம்ப்பின் பழைய வீடு $2.4 மில்லியனுக்கு விற்றது

AP Photo/Kathy Willens, File

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சிறுவயதில் வாழ்ந்த வீடு 1.93 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (2.4 மில்லியன் வெள்ளி) விற்கப்பட்டுள்ளது.

நியூயார்க்கின் குயின்ஸ் (Queens) பகுதியில் இருந்த அந்த வீட்டில், திரு டிரம்ப் நான்கு வயது வரை வாழ்ந்தார்.

1940ஆம் ஆண்டு, திரு டிரம்ப்பின் தந்தை திரு ஃபிரெட் டிரம்ப் (Fred Trump) அந்த வீட்டைக் கட்டினார்.

ஐந்து படுக்கையறைகளையும் மூன்று குளியலறைகளையும் கொண்டது அந்த வீடு.

கடந்த ஆண்டு, டாமி லின் (Tommy Lin) என்பவர் அந்த வீட்டை 835,000 டாலருக்கு (1.05 மில்லியன் வெள்ளி) வாங்கினார். ஆனால் குடியேறவில்லை.

பல ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி இருந்த வீட்டில் தண்ணீர் இல்லை, உடைந்த குழாய், பூஞ்சை போன்ற பல பிரச்சினைகள் இருந்தன. 

அங்கு காட்டுப் பூனைகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

லின், சுமார் 500,000 டாலர் (633,650 வெள்ளி) செலவு செய்து,  எட்டு மாதங்களில்  வீட்டைப் புதுப்பித்தார்.

நவீனச் சமையலறை, புதிய மரத்தளம், ஆடம்பரக் குளியலறைகள் உள்ளிட்ட வசதிகள் சேர்க்கப்பட்டன.

புதுப்பிக்கப்பட்ட அந்த வீடு தற்போது 1.93 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டுள்ளது.
 

ஆதாரம் : AP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்