Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மனிதகுலத்தின் அழிவுக்கு '90 விநாடி' - Doomsday கடிகாரத்தில் மாற்றம்

வாசிப்புநேரம் -

ஆராய்ச்சியாளர்கள் Doomsday கடிகாரத்தில் உள்ள நேரத்தை 10 விநாடி முன்னோக்கி மாற்றியுள்ளனர்.

இப்போது நள்ளிரவு 12 மணிக்கு இன்னும் 90 விநாடிகள் மட்டும் உள்ளதைக் கடிகாரம் காட்டுகிறது.

மனிதகுலம் அதன் அழிவை நெருங்கும் காலத்தைப் பிரதிபலிப்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் 'Doomsday கடிகாரத்தை' ஒரு சான்றாகப் பயன்படுத்துவதுண்டு.

 Bulletin of the Atomic Scientists எனும் அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆண்டுதோறும் கடிகாரத்தில் உள்ள நேரத்தை மறுஆய்வு செய்வார்கள்.

உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்ததை அடுத்து அணுவாயுதப் பயன்பாட்டுக்கான ஆபத்து அதிகரித்துள்ளதாக அமைப்பு சுட்டியது.

பருவநிலை நெருக்கடியும் மோசமடைந்துள்ளதாக அது குறிப்பிட்டது.

கடிகார நேரத்தில் செய்யப்பட்ட மாற்றம் உலகம் இதுவரை இல்லாத ஆபத்தில் உள்ளதைக்  பிரதிபலிக்கிறது.

உலகத் தலைவர்களை உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அமைப்பு வலியுறுத்தியது.
 
கடிகாரத்தில் உள்ள நேரம் இதற்கு முன்னர் 2020ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது.

-AFP

ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்