Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரிட்டனில் டௌனிங் ஸ்ட்ரீட் சர்ச்சை - முடிவுற்றது காவல்துறையின் விசாரணை

வாசிப்புநேரம் -

பிரிட்டனில் முடக்கநிலை நடப்பில் இருந்தபோது டௌனிங் ஸ்ட்ரீட்டில் இடம்பெற்ற விதிமீறல்களின் தொடர்பில் காவல்துறையின் விசாரணை முடிவடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மொத்தம் 126 அபராத உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

டௌனிங் ஸ்ட்ரீட் அலுவலகத்தில் COVID-19 கட்டுப்பாடுகளை மீறியதன் தொடர்பில் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த சில மாதங்களாகச் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

அவர் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுவடைந்துள்ளன.

2020ஆம் ஆண்டு ஜூன் மாதம், திரு. ஜான்சன், அலுவலகத்தில் அவரின் 56ஆம் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்ததன் தொடர்பில் அவருக்கும் நிதியமைச்சர் ரிஷி சுனக்கிற்கும் கடந்த மாதம் அபராதம் விதிக்கப்பட்டது.

-Reuters
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்