Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வடகொரியாவில் காணாமல் போனவர்கள்

வாசிப்புநேரம் -
வடகொரியாவிலிருந்து தப்பி ஓட முயன்று காவல்துறையிடம் பிடிபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.

தென் கொரியாவைச் சேர்ந்த மனித உரிமைக் குழு அவ்வாறு சொல்கிறது.

வடகொரியாவிலிருந்து தப்பி ஓடித் தென்கொரியாவுக்கு வந்த 62 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.

அப்போது அந்த விவரம் வெளியானது.

1953ஆம் ஆண்டில் கொரியப் போர் முடிவுற்றது.

அதுமுதல் 10,000க்கும் மேற்பட்ட வடகொரியர்கள் நாட்டைவிட்டு ஓட முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.

தப்பி ஓட முயன்றவர்கள் வடகொரியாவில் பிடிபட்டனர்.

சிலர் ரஷ்யாவிலும், சீனாவிலும் சிக்கியதாக நம்பப்படுகிறது.
ஆதாரம் : Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்