Skip to main content
துருக்கியேவில் கம்பிட வண்டி விபத்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

துருக்கியேவில் கம்பிட வண்டி விபத்து - ஒருவர் மரணம்; பலர் காயம்

வாசிப்புநேரம் -
துருக்கியேவில் கம்பிட வண்டி விபத்து - ஒருவர் மரணம்; பலர் காயம்

(படம்: Reuters)

துருக்கியேவில் பிரபலச் சுற்றுலாத்தலங்களில் ஒன்றான அன்ட்டால்யாவில் (Antalya) நிகழ்ந்த கம்பிவட வண்டி விபத்தில் ஒருவர் மரணமடைந்தார். பலர் காயமுற்றனர்.

கம்பிவட வண்டி கம்பத்தில் மோதியது.

மோதிய வேகத்தில் வண்டி உடைந்து திறந்துகொண்டது. ஒருவர் மாண்டார்.

அந்தரத்தில் தொங்கிய கம்பிவட வண்டிக்குள் 43 பேர் சிக்கிக்கொண்டதாக AFP செய்தி வெளியிட்டது.

விபத்து வெள்ளிக்கிழமை (12 ஏப்ரல்) நிகழ்ந்தது.

16 கம்பிவட வண்டிகளிலிருந்து 128 பேர் மீட்கப்பட்டதாகத் துருக்கியேவின் பேரிடர், அவசர நிர்வாக அமைப்பு தெரிவித்தது.

கம்பிவட வண்டிக்குள் சிக்கியவர்களை மீட்க 7 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. 500க்கும் அதிகமான மீட்புப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டனர்.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை தொடங்கியுள்ளது.

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்