ஆளில்லா வானூர்தி மூலம் சேவை வழங்கத் திட்டமிடும் பிரிட்டனின் அஞ்சல் துறை

(படம்: Facebook/Royal Mail)
பிரிட்டனின் அஞ்சல் துறை ஆளில்லா வானூர்தி மூலம் சேவை வழங்கத் திட்டமிடுகிறது.
தொலைவில் உள்ள தீவுகளில் வசிப்போருக்குக் கடிதங்களையும் பொருள்கள் அடங்கிய பொட்டலங்களையும் கொண்டுசேர்க்க 50 வான்வழிப் பாதைகளை அமைக்க எண்ணுகிறது The Royal Mail.
அடுத்த மூவாண்டுகளில் 200 ஆளில்லா வானூர்திகள் அஞ்சல் சேவையில் ஈடுபடுத்தப்படலாம்.
ஸ்காட்லந்தில் (Scotland) சில தீவுகளுக்கும் இங்கிலாந்தின் தென் கரைக்கு அப்பால் உள்ள தீவுகளுக்கும் முதலில் வானூர்தித் தடங்கள் அறிமுகம் செய்யப்படும்.
அதிகபட்சம் 100 கிலோகிராம் எடையுள்ள பொருள்களை ஆளில்லா வானூர்திகள் எடுத்துச் செல்லலாம்.
கடிதங்களையோ, பொட்டலங்களையோ பெற்றுக்கொள்ளும் அஞ்சல் துறையினர் அவற்றை உரியவர்களிடம் கொண்டுசேர்ப்பர்.
சுமார் 1.5 ஆண்டாக முன்னோட்டம் நடந்துவருகிறது.
ஆளில்லா வானூர்திகள் அதிகாரபூர்வமாகச் சேவையைத் தொடங்க, பிரிட்டிஷ் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அனுமதி தேவை.