வறட்சி, வெப்பம்... காட்டுத்தீயைச் சமாளிக்கத் தயாராகும் ஐரோப்பிய நாடுகள்

(படம்: Pixabay)
மத்திய தரைக்கடல் நாடுகள் சிலவற்றில் கடுமையான வறட்சி.
ஸ்பெயினிலும், ஜெர்மனியிலும் முன்னெப்போதும் காணாத வெப்பம்.
சில இடங்களில் பற்றி எரிகிறது காட்டுத்தீ.
நிலைமை இன்னும் மோசமாகலாம் என்பது முன்னுரைப்பு.
காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தத் தேவைப்படும் விமானங்களுக்கு எரிபொருள் செலவு அதிகம்.
அத்துடன் சென்ற ஆண்டை விட இம்முறை கோடைக்காலம் கடுமையாக இருக்கும் என்பதால் காட்டுத்தீ அபாயம் மிக அதிகம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தென்மேற்கு துருக்கியில் மூண்ட காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தத் தீயணைப்பாளர்கள் போராடுகின்றனர்.
பெருமளவு நெருப்பு அணைக்கப்பட்டு விட்டது. ஆனால், பற்றி எரிந்த நெருப்பு சென்ற ஆண்டின் பேரழிவை நினைவூட்டுகிறது. அப்போது அந்த வட்டாரத்தின் பல்லாயிரம் ஹெக்டர் நிலப்பரப்பு நாசமானது.
பருவநிலை மாற்றத்தால் உலக வெப்பம் உயர்ந்து வருகிறது.
தென் ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல...பிரிட்டன், ஜெர்மனி, ஸ்கேண்டிநேவிய நாடுகளும் கூட காட்டுத்தீயைச் சமாளிக்கத் தயாராகின்றன.