Skip to main content
எரிமலையில் தொலைந்தவர்களைத் தேடும்பணி தொடர்கிறது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

எரிமலையில் தொலைந்தவர்களைத் தேடும்பணி தொடர்கிறது

வாசிப்புநேரம் -
எரிமலையில் தொலைந்தவர்களைத் தேடும்பணி தொடர்கிறது

படம்: BASARNAS

வெளியீடு : 09 May 2026 09:13AM புதுப்பிப்பு : 09 May 2026 12:23PM

இந்தோனேசியாவின் டுகோனோ (Dukono) எரிமலையை ஏறச்சென்று காணாமல் போன மூவரைத் தேடி மீட்கும் பணியை அதிகாரிகள் இன்று தொடரவிருக்கின்றனர்.

எரிமலை வெடிப்பில் சிக்கி மூவர் மாண்டனர். அவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள். ஒருவர் இந்தோனேசியர். 

மலையேறுவதற்காக 20 பேர் இந்தோனேசியாவின் வட மலுக்கு (Maluku) மாநிலத்திற்குச் சென்றிருந்தனர். 

அவர்களில் 9 பேர் சிங்கப்பூரர்கள். 

சிங்கப்பூர் நேரப்படி நேற்று (மே 8) காலை 8.45  மணியளவில் எரிமலை வெடித்தது. 

எரிமலை தொடர்ந்து குமுறுகிறது. நிலைமை மோசமாக இருப்பதால் அதிகாரிகள் மாண்டவர்களின் உடல்களை இன்னும் மீட்கவில்லை. 

மலையேறச் சென்ற குழு பாதுகாப்பு விதிகளை மீறியதாகக் காவல்துறை தெரிவித்தது. 

இணையத்தில் படங்களையும் தகவல்களையும் வெளியிடும் நோக்கத்தோடு மலையேறிகள் சென்றதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 

அங்குச் செல்வதற்குக் கடந்த மாதம் முதலே தடை விதிக்கப்பட்டிருந்தது. 

ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்