ஜொகூர் தேர்தல்: டுரியான் விளைச்சல் வாக்குப்பதிவை அதிகரிக்குமா?
This audio is generated by an AI tool.
ஜொகூரில் டுரியான் பருவம் உச்சத்தை எட்டியுள்ளது. இது மாநிலத் தேர்தலில் வாக்குப்பதிவை ஓரளவு அதிகரிக்கலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
டுரியான் தோட்டங்கள் அதிகம் உள்ள பகுதிகளிலேயே பல முக்கியத் தொகுதிகள் அமைந்துள்ளன. டுரியான் வாங்கவும் குடும்பத்தினரைச் சந்திக்கவும் சொந்த ஊருக்குத் திரும்புவோர் வாக்களிக்கும் வாய்ப்பு அதிகம் என அவர்கள் கருதுகின்றனர்.
டுரியான் கடைகளும் தோட்டங்களும் தேர்தல் விவாதங்கள் நடைபெறும் இடங்களாகவும் மாறலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால், டுரியானை இலவசமாக வழங்கி வாக்காளர்களைக் கவர முயல்வது தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக இருக்கக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இருப்பினும், டுரியான் பருவம் மட்டும் தேர்தல் முடிவைத் தீர்மானிக்காது.
கட்சிகளின் பிரசாரம், வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்லும் ஏற்பாடுகள் போன்றவையும் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜொகூரில் வரும் 11ஆம் தேதி வாக்களிப்பு.
கிட்டத்தட்ட 2.7 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.