Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இத்தாலியின் புளோரன்ஸ் நகர் அருகே நிலநடுக்கம்

வாசிப்புநேரம் -

இத்தாலியில் புளோரன்ஸ் (Florence) நகருக்கு வடக்கே உள்ள பகுதியை 4.8 ரிக்டர் நிலநடுக்கம் உலுக்கியது.

மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் கூடினர். யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சில இடங்களில் பள்ளிகள் மூடப்பட்டன. ரயில் தண்டவாளங்கள் பரிசோதிக்கப்பட்ட பின்னரே ரயில்கள் இயக்கப்பட்டன. அதனால் ரயில் பயணங்களில் தாமதம் ஏற்பட்டது.

மராடி (Marradi) எனும் சிறுநகரத்துக்கு அருகே அந்த நிலநடுக்கம் மையமிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு சுமார் 3,000 பேர் வசிக்கின்றனர்.

-AFP

பதற்றமடைந்த குடியிருப்பாளர்கள் அவசரத் தொலைபேசி அழைப்புகளைச் செய்ததாகத் தீயணைப்புத் துறை வீரர்கள் X தளத்தில் குறிப்பிட்டனர்.

இதற்குமுன்னர், 2019இல் முஜெலோவுக்கு (Mugello) அருகே 4.5 ரிக்டர் நிலநடுக்கம் உலுக்கியது. எனினும், பெரியளவில் சேதங்கள் ஏற்படவில்லை. 17ஆம் நூற்றாண்டு தேவாலயத்தின் முகப்பில் விரிசல் ஏற்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்