பிலிப்பீன்ஸில் வலுவான நிலநடுக்கம் - ஒருவர் மரணம்; சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது
படம்: AFP/Edwin Espejo
பிலிப்பீன்ஸை வலுவான நிலநடுக்கம் உலுக்கியதைத் தொடர்ந்து ஒருவர் மாண்டதாகத் தகவல்கள் வந்துள்ளன.
நால்வர் காயமுற்றதாகக் கூறப்படுகிறது.
உள்ளூர் நேரப்படி காலை ஏழரை மணி வாக்கில் மிண்டனாவ் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
உடனடி நடவடிக்கை எடுக்கும்படி பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர் (Ferdinand Marcos Jr)அனைத்து அரசாங்க அமைப்புகளுக்கும் உத்தரவிட்டார்.
கரையோரப் பகுதிகளை விட்டு வெளியேறுவதற்கான எச்சரிக்கைகளுக்கு உட்பட்டு நடக்கும்படி அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
நிலநடுக்கம் 7.8 ரிக்டர் அளவில் இருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் கூறியது.
ஜெர்மனியின் ஆய்வு நிலையம் அதனை 8.2 ரிக்டர் அளவாக மதிப்பிட்டது.
வழக்கத்தைவிட அலைகள் ஒரு மீட்டருக்கு மேல் உயரலாம் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
இந்தோனேசியாவிலும் வலுவான அதிர்வுகள் உணரப்பட்டன.
கணிசமான சேதமும் பின்னதிர்வுகளும் ஏற்படலாம் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.