Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

எதிர்த் திசையில் சுழல்கிறது பூமியின் உள்ளடுக்கு: ஆய்வு

வாசிப்புநேரம் -
எதிர்த் திசையில் சுழல்கிறது பூமியின் உள்ளடுக்கு: ஆய்வு

(படம்: Pixabay)

நிலம்....சமுத்திரங்கள்...

மேற்பரப்பிலிருந்து கிட்டத்தட்ட 5,000 கிலோமீட்டருக்குக் கீழே .... பூமியின் மையத்தில் எஃகு  உள்ளது.

உலோகத் திரவத்தில் மிதக்கும் அந்த எஃகு உருளையாகவும் சூடாகவும் இருக்கும்.சுயேச்சையாகச் சுற்றும் ஆற்றல் அதற்கு உள்ளது.

 பூமி சுழலும் திசையில்  சுற்றுவதை அது நிறுத்திவிட்டதாக  ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. 

பூமியைப் போல் அல்லாமல் அது வேறு திசையில் சுழல்வதாக  Nature Geoscience சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 60 ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் அதிர்வுகள் ஆராயப்பட்டதில் எஃகின் சுழற்சி 2009ஆம் ஆண்டே நின்று போய், அது எதிர்த் திசையில் சுற்றத் தொடங்கியது.

எஃகு ஓர் ஊஞ்சலைப் போல் முன்னும் பின்னும் செல்லக்கூடியது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

35 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதன் திசை மாறும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

2040களின் மத்தியில் எஃகின் திசை இனி மாறக்கூடும் என்று நம்பப்படுகிறது.

எஃகின் சுழற்சி மனிதர்களை எவ்வகையில் பாதிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பூமியின் அனைத்து அடுக்குகளுக்கு இடையிலும்  இயற்பியல் தொடர்புகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

-AFP

ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்