Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலக நாடுகள் COVID-19 கட்டுப்பாடுகளைக் கவனத்துடன் படிப்படியாகத் தளர்த்தவேண்டும்: உலகச் சுகாதார நிறுவனம்

வாசிப்புநேரம் -

உலகச் சுகாதார நிறுவனம் கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகளைப் படிப்படியாகவும் கவனத்துடனும் தளர்த்துமாறு வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் குறைவாக உள்ள நாடுகள், எளிதில் கிருமித்தொற்றுக்கு ஆளாகக்கூடியோர் உள்ள பகுதிகள் ஆகியவற்றில் கட்டுப்பாடுகள் கவனத்துடன் தளர்த்தப்படவேண்டும் என்று அது கேட்டுக்கொண்டது.

ஓமக்ரான் வகை நோய்ப்பரவல் இன்னும் பல நாடுகளில் உச்சத்தை எட்டவில்லை என்று நிறுவனம் எச்சரித்தது.

ஒவ்வொரு நாடும் எவ்வாறு நோய்ப்பரவலிலிருந்து மீண்டு வரவிருக்கின்றது என்பதைச் சுயமாகத் திட்டமிட்டு செயல்படுமாறு நிறுவனத்தின் அவசரகாலத் திட்டப் பிரிவுத் தலைவர் மைக் ராயன் (Mike Ryan) கேட்டுக்கொண்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்