Skip to main content
EasyJet விமானத்தின் நடைபாதையில் சிறுநீர் கழித்த பயணி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

EasyJet விமானத்தின் நடைபாதையில் சிறுநீர் கழித்த பயணி - அவசரமாகத் தரையிறங்கியது விமானம்

வாசிப்புநேரம் -
EasyJet விமானத்தின் நடைபாதையில் பிரட்டிஷ் ஆடவர் ஒருவர் சிறுநீர் கழித்ததால் விமானம் அவசரமாகத் தரையிறங்க நேரிட்டது.

இங்கிலாந்தின் பர்மிங்ஹம் (Birmingham) நகரிலிருந்து ஸ்பெயினின் டெனரீஃப் (Tenerife) தீவுக்கு விமானம் சென்றுகொண்டிருந்ததாக The Sun நாளேடு தெரிவித்தது.

ஆடவர் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாக விமானச் சிப்பந்திகள் கூறினர். நடுவானில் உடனடியாக அவர்கள் உதவி கேட்டனர்.

அதிகாரிகளின் நிலைமை அறிந்ததும் விமானம் விரைவாக டெனரீஃப் சௌத் விமான நிலையத்தில் (Tenerife South Airport) தரையிறங்க ஏற்பாடுகள் செய்ததாக Canary Islands Weekly நாளேடு தெரிவித்தது.

விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது.

விமான நிலையத்தில் காவல்துறை அதிகாரிகளும் மருத்துவ அதிகாரிகளும் இருந்தனர். அவர்கள் பயணிக்கு உதவி புரிந்தனர்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்