Skip to main content
"இபோலா பரவலாம்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"இபோலா பரவலாம்"

வாசிப்புநேரம் -
"இபோலா பரவலாம்"

Seros MUYISA / AFP

வெளியீடு : 24 May 2026 11:29AM புதுப்பிப்பு : 24 May 2026 01:51PM

இபோலா கிருமியால் ஆப்பிரிக்காவின் பிற நாடுகளுக்கும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருமிப்பரவல் காங்கோ குடியரசையும் உகண்டாவையும் தாண்டி, ஆப்பிரிக்காவின் மேலும் பல நாடுகளைப் பாதிக்கும் அபாயம் இருப்பதாக ஆப்பிரிக்க ஒன்றியத்தின் சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

கென்யா (Kenya), ருவாண்டா (Rwanda), டான்ஸேனியா (Tanzania), தெற்குச் சூடான் (South Sudan) உட்பட 10 நாடுகள் அபாயத்தில் இருப்பதாக அமைப்பு குறிப்பிட்டது.

உகண்டாவில் மேலும் மூன்று பேருக்கு இபோலா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

காங்கோ குடியரசில் செஞ்சிலுவைச் சங்கத்தின் தொண்டூழியர்கள் மூவர் மாண்டதாகக் கூறப்பட்டது.

வேகமாகப் பரவும் இபோலா தொற்றை உலகச் சுகாதார நிறுவனம் அனைத்துலக அவசரநிலையாக அண்மையில் அறிவித்தது.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்