Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஈக்குவடோரை உலுக்கிய வலுவான நிலநடுக்கத்தால் 14 பேர் மரணம்

வாசிப்புநேரம் -
தென்னமெரிக்க நாடான ஈக்குவடோரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 14 பேர் மாண்டனர்.

6.8 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கம் தாக்கியது. வீடுகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட கட்டடங்கள் சேதம் அடைந்தன.

ஈக்குவடோரின் 24 மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டன.

அரசாங்கத்துக்குச் சொந்தமான Petro-Ecuador எண்ணெய் நிறுவனம் அதன் எல்லாக் கட்டடங்களிலும் நடவடிக்கைகளை நிறுத்தியது.

முன்னெச்சரிக்கையாக, நடவடிக்கை நிறுத்தப்பட்டதாகவும் நிலநடுக்கத்தால் பாதிப்பில்லை என்றும் அது தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்