Skip to main content
காஸா சண்டை நிறுத்தம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

காஸா சண்டை நிறுத்தம் - மீண்டும் சிக்கல்

வாசிப்புநேரம் -
காஸா சண்டை நிறுத்தம் - மீண்டும் சிக்கல்

(படம்: Ismael Abu Dayyah/AP)

காஸாவில் சண்டை நிறுத்தத்தைச் செயல்படுத்தும் முயற்சிகளில் மீண்டும் தடை ஏற்பட்டுள்ளது.

அண்மையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை ஹமாஸ் நிராகரித்திருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.

போரை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்று ஹமாஸ் கூறுகிறது.

ஹமாஸ் தரப்பிடமிருந்து அதிகாரபூர்வப் பதில் கிடைத்திருப்பதாய் கத்தார், எகிப்து சமரசப் பேச்சாளர்கள் கூறினர்.

எந்த ஓர் உடன்பாடாக இருந்தாலும் இஸ்ரேல் முழுமையாக அதன் படைகளை மீட்டுக்கொள்ள வேண்டும், காஸா மறுசீரமைக்கப்பட வேண்டும், இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனர்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட வேண்டும் என்று ஹமாஸ் தரப்பு கூறுகிறது.

ஹமாஸ் விதிக்கும் அத்தகைய நிபந்தனைகள், உடன்பாட்டை நிராகரிப்பதற்குச் சமம் என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் சொன்னார்.
ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்