அமெரிக்க-இந்திய உறவில் அதிகரிக்கும் பதற்றம்
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: REUTERS/Kevin Lamarque)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்க-இந்திய அரசதந்திர உறவுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதற்காக இந்தியப் பொருள்கள் மீதான வரிகளை அதிகரிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) மீண்டும் மிரட்டியுள்ளார்.
அடுத்த 24 மணி நேரத்திற்குள் வரிகள் கணிசமாக உயர்த்தப்படும் என்று அவர் சொன்னார்.
CNBC தொலைக்காட்சிப் பேட்டியில் அதனைத் தெரிவித்தார்.
இந்தியா நல்ல வர்த்தகப் பங்காளியாகத் திகழவில்லை, உக்ரேன் போரை அது தூண்டிவிடுவதாகத் திரு டிரம்ப் சொன்னார்.
அமெரிக்கப் பொருள்களுக்கு இந்தியா வரி விலக்கு அளிக்க முன்வந்துள்ளது.
ஆனால் அது ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதால் அதன் பரிந்துரையை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றார் திரு டிரம்ப்.
திரு டிரம்ப்பின் கருத்துகளுக்கு இந்தியா இன்னும் பதிலளிக்கவில்லை.
இந்தியா நியாயமற்ற முறையில் குறி வைக்கப்படுவதாக அதன் வெளியுறவு அமைச்சு கூறியது.

ஆதாரம் : Others