Skip to main content
ஜொகூரில் சூடுபிடிக்கும் தேர்தல் ஆயத்தப் பணிகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஜொகூரில் சூடுபிடிக்கும் தேர்தல் ஆயத்தப் பணிகள்

வாசிப்புநேரம் -
ஜொகூரில் சூடுபிடிக்கும் தேர்தல் ஆயத்தப் பணிகள்

படம்: Anwar Ibrahim/Facebook

வெளியீடு : 07 Jun 2026 10:49AM புதுப்பிப்பு : 07 Jun 2026 01:17PM

மலேசியாவின் ஜொகூர் (Johor) மாநிலத்தில் தேர்தல் ஆயத்தப் பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்ட பிறகு வந்துள்ள முதல் வார இறுதி இது.

மக்களின் மனநிலையை அறிந்துகொள்ளவும், தங்களுக்கான ஆதரவைத் திரட்டவும் பல்வேறு கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

பிரதமர் அன்வார் இப்ராஹிமும் (Anwar Ibrahim) அவரது பக்கத்தான் ஹராப்பான் (Pakatan Harapan) கூட்டணித் தலைவர்களும் நேற்றிரவு பத்து பஹாட் மாவட்டத்துக்குச் சென்றனர்.

கூட்டணியின் பிரசாரத்தில் பொருளாதார விவகாரங்களில் அதிகக் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெர்சாமா (Bersama) கட்சித் தலைவர்களும் நேற்று ஜொகூருக்குச் சென்றனர்.

திரு அன்வாரின் அமைச்சரவையில் இருந்த இரண்டு முன்னாள் அமைச்சர்கள் அந்தக் கட்சியைத் தொடங்கியுள்ளனர்.

சென்ற மாதம் தொடங்கப்பட்ட கட்சிக்கு இது முதல் தேர்தல் சோதனையாக இருக்கும்.

இன்று ஜொகூர் மாநிலத்தின் ஆளும் தேசிய முன்னணி (Barisan Nasional) அதன் ஆயத்தப் பணி குறித்த விவரங்களை வெளியிடவிருக்கிறது.

ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்